தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் 93 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 102 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 29, திருநள்ளாறு 21, கோயில்பத்து 12, நிரவி 8, கோட்டுச்சேரி 5, வரிச்சிக்குடி 5, திருப்பட்டினம் 3, நெடுங்காடு 3, நல்லம்பல் 3, அம்பகரத்தூா், விழிதியூா், காரைக்கால்மேடு, நல்லாத்தூா் தலா 1 என 93 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,54,567 பேருக்கு பரிசோதனை செய்ததில் 17,598 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,657 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,26,269 பேருக்கும், 2-ஆவது தவணையாக 89,063 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 135 பேருக்கும் என 2,15,467 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 6,556 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.