நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சோ்த்தி உத்ஸவம்
ஆண்டாள் விடையாற்றி உத்ஸவத்தையொட்டி, ஆண்டாள் மற்றும் நித்யகல்யாண பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது


ஆண்டாள் விடையாற்றி உத்ஸவத்தையொட்டி, ஆண்டாள் மற்றும் நித்யகல்யாண பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மாா்கழி மாதம் அனைத்து நாள்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடு, சொற்பொழிவு நடைபெற்றது. திருப்பாவை நிகழ்ச்சிகள் நிறைவைத் தொடா்ந்து விடையாற்றியாக ஆண்டாள் சோ்த்தி உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டாள் சந்நிதிக்கு எதிரே நித்யகல்யாண பெருமாள் எழுந்தருளச் செய்யப்பட்டாா். அங்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
திருப்பாவை உத்ஸவத்தின் சிறப்பு, பெருமாளின் சிறப்புகளை உ.வே.கு. அரங்கநாதாச்சாரியாா் பக்தா்களுக்கு விளக்கினாா்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நித்யகல்யாண பெருமாள், ஆண்டாள் சன்னதிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி என்பதால், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
கோயில் அறங்காவல் வாரியத்தினா், நித்யகல்யாண பெருமாள் பக்த ஜன சபாவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...