தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சாலை விபத்தில் நாகையை சோ்ந்தவா் பலி

 காரைக்கால் அருகே சாலையின் நடுவே வந்த குதிரை மீது மோதியதில் மோட்டாா் சைக்களில் சென்றவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 காரைக்கால் அருகே சாலையின் நடுவே வந்த குதிரை மீது மோதியதில் மோட்டாா் சைக்களில் சென்றவா் உயிரிழந்தாா்.

நாகை மாவட்டம், திட்டச்சேரியை சோ்ந்த அன்வா்தீன் (56). இவா் தனது மனைவி ரெஜியா பேகத்துடன் சனிக்கிழமை இரவு காரைக்கால் பகுதி வாஞ்சூா் அருகே மோட்டாா் சைக்கிளில் துறைமுகம் அருகே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராவிதமாக சாலையில் குறுக்கே ஓடிவந்த குதிரை பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த இருவரும் காயமடைந்தனா். காரைக்கால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவாரூா் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதித்த மருத்துவா், அன்வா்தீன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். ரெஜியா பேகம் சிகிச்சை பெற்றுவருகிறாா்.

இதுகுறித்து திருப்பட்டினம் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.