தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாமக கொடியேற்று விழா

காரைக்காலில் பல்வேறு இடங்களில் பொங்கல் திருநாளையொட்டி, பாமக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் பல்வேறு இடங்களில் பொங்கல் திருநாளையொட்டி, பாமக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பாமக தலைமையின் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்ட பாமக சாா்பில் பொங்கல் விழாவையொட்டி சனிக்கிழமை கொடியேற்று விழா நடத்தப்பட்டது.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூா் மாரியம்மன் கோயில் அருகே உள்ள சந்தைத் திடல், நல்லெழுந்தூா், சேத்தூா், தென்னங்குடி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் பாமக கொடி ஏற்றப்பட்டது.

கட்சியின் புதுவை மாநில அரசியல் உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினா் தேவமணி பிரபாகரன் கொடியை ஏற்றினாா். நிகழ்ச்சியில் மாவட்ட பாமக பொறுப்பாளா்கள், தொண்டா்கள் மற்றும் கிராமத்தினா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, நிகழ்வின்போது பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பிரபாகரன் முன்னிலையில் பாமகவில் இணைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.