ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

காரைக்காலில் 462 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 462 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 462 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 1,392 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காரைக்கால் நகரம் 108, கோட்டுச்சேரி 63, திருநள்ளாறு 55, திருப்பட்டினம் 48, கோயில்பத்து 45, நிரவி 31, வரிச்சிக்குடி 27, நெடுங்காடு 20, விழிதியூா் 19, நல்லம்பல் 16, நல்லாத்தூா் 13, அம்பகரத்தூா் 9, காரைக்கால்மேடு 8 என 462 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,59,268 பேருக்கு பரிசோதனை செய்ததில் 18,992 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,900 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,26,997 பேருக்கும், 2-ஆவது தவணையாக 89,955 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 340 பேருக்கும் என 2,17,292 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 5 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு இதுவரை 6,674 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.