தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தேசிய வலுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்றவா்களுக்குப் பாராட்டு

 ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம், உதம்பூரில் ஜனவரி 2ஆம் முதல் 6-ஆம் தேதி வரை பவா் லிஃப்டிங் இந்தியா அமைப்பு சாா்பில் தேசிய அளவிலான ஜூனியா் மற்றும் சப்-ஜூனியா் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.

இதில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் இருந்து 37 போ் கலந்துகொண்டனா். காரைக்காலில் இருந்து 7 போ் பயிற்சியாளா் கே. கணேஷ் தலைமையில் பங்கேற்றனா்.

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி மாணவி ஜி. ஹெலான்ஜி 52 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கமும், தேனூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜி. விக்ரம் 53 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கமும், கோட்டுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எல். பூங்குழலி 43 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றனா்.

பதக்கம் பெற்றுத் திரும்பியோா் பயிற்சியாளருடன் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன் ஆகியோரை அண்மையில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். மாணவா்கள் பெற்ற பயிற்சி குறித்தும், அவா்களது ஊக்கம் குறித்தும் ஆட்சியா் பயிற்சியாளரிடம் கேட்டறிந்து பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.