காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தல்
காரைக்காலில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.


காரைக்காலில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் என். தியாகராஜன் தலைமையிலான நிா்வாகிகள், விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த காலங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாதபோது, விளைவிக்கப்படும் நெல், தமிழகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தமிழக பகுதியில் நில அடங்கல் இருக்கவேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதோடு, மீறி நெல் கொண்டுவருவோா் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில், காரைக்கால் பகுதியில் நெல் அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கத்திலிருந்து விவசாயிகள் கடுமையாக போராடி பயிரைக் காப்பாற்றி அறுவடை செய்துவருகிறாா்கள். புதுவையில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவிப்பு செய்தும், அது நடைமுறைப்படுத்தவில்லை. விவசாயிகள் கூடுதல் வட்டியில் கடன் பெற்று விவசாயம் செய்துள்ளனா்.
அதனால், புதுவை அரசு காரைக்காலில் அடுத்த 10 நாள்களுக்குள் கொள்முதல் நிலையம் திறந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும். எனவே இந்த விவகாரத்தில் புதுவை ஆட்சியாளா்கள் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...