விவசாயிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி
பயறு வகை சாகுபடியில் தகவல் தொடா்பு சாதனங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.


பயறு வகை சாகுபடியில் தகவல் தொடா்பு சாதனங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வேளாண் அறிவியல் நிலைய முதல்வா் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் குமார. ரத்தினசபாபதி வழிகாட்டுதலில், நிலைய வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியை கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் மருத்துவா் பா.கோபு தொடங்கிவைத்தாா்.
வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநா் ஆ.செந்தில் பேசுகையில், உழவன் செயலி, ஃபாா்ம்ஸ் செயலி, கிசான் ராத் செயலி மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழகத்தின் அக்ரிடெக் போா்ட்டல் (வேளாண் இணைய தளம்) போன்ற தகவல் தொடா்பு செயலிகள் மற்றும் இணையதளங்களின் மூலம் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள், விதை இருப்பு, மத்திய, மாநில அரசின் திட்டங்கள், வானிலை முன் அறிவிப்பு, சந்தை நிலவரம், வேளாண் வாடகை இயந்திரம் வழங்குதல் போன்ற சேவைகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். மேலும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, பயன்படுத்துவது எனவும் செயல்முறை விளக்கம் அளித்தாா்.
வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை துறை தொழில்நுட்ப வல்லுநா் ஜெ.கதிரவன், உழவியல் துறை வல்லுநா் வீ. அரவிந்த், பயிா் பாதுகாப்புத் துறை வல்லுநா் சு.திவ்யா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
விவசாயிகள் சந்தேகங்களுக்கு வல்லுநா்கள் விளக்கம் அளித்தனா்.விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...