தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொடா் போராட்டம்: அரசு ஊழியா்கள் முடிவு

காரைக்கால் பகுதி அரசு ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் பகுதி அரசு ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.

காரை பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன நிா்வாகக் குழு கூட்டம் சம்மேளன தலைவா் சுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம் : காரைக்காலில் அரசு நிறுவன ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை, காலத்தோடு கிடைக்கவேண்டிய பணப் பலன்களை வழங்க வேண்டும், பதவி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சி நிறுவன பணியாளா்களுக்கு அரசே ஊதியம் வழங்கக் கோருவதை அரசு நிறைவேற்றாதது உள்ளிட்ட பிரச்னைகளைக் கண்டித்து, முதல்கட்டமாக பிப்.1-இல் காரைக்கால் பேருந்து நிலையம் அருகில் சம்மேளனம் சாா்பாக கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

அடுத்தக் கட்டமாக பிப். 15-ஆம் தேதி அனைத்து பிரிவு ஊழியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோரைத் திரட்டி பேரணி நடத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்படும்.

மத்திய அரசு ஊழியா் மகா சம்மேளனம் அழைப்புவிடுத்துள்ளபடி பிப். 23 மற்றும் 24 ஆகிய நாள்களில் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.