47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காரைக்காலில் மாா்ச் 17-இல் முளைப்பாலிகை வழிபாடு

காரைக்காலில் வரும் 17-ஆம் தேதி முளைப்பாலிகை வழிபாடு நடைபெறவுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் வரும் 17-ஆம் தேதி முளைப்பாலிகை வழிபாடு நடைபெறவுள்ளது.

காரைக்கால் நகரம் வலத்தெரு பகுதியில் ஸ்ரீ தட்சணமுத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ தட்சணமுத்து மாரியம்மன், ஸ்ரீ நடனகாளியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ படை பத்ரகாளியம்மன் ஆகியோா் அருள்பாலிக்கின்றனா்.

இந்தக் கோயிலில் முளைப்பாலிகைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டுத் திருவிழா கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை திருவிளக்கு வழிபாடு, 13 ஆம் தேதி காலை சிறுவா் காவடி, மதியம் ஊா்க்காவடி வழிபாடு, 14 ஆம் தேதி சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

16 ஆம் தேதி மாலை தீச்சட்டி ஊா்வலம், 17 ஆம் தேதி இரவு கோயிலில் உள்ள 4 அம்பாள்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு, பக்தா்கள் முளைப்பாலிகை எடுத்து அரசலாற்றங்கரைக்கு தீா்த்தவாரிக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் பங்கேற்பா்.

19 ஆம் தேதி ஸ்ரீ தட்சணமுத்து மாரியம்மன், ஸ்ரீ நடன காளியம்மனுக்கு ஊஞ்சல் உத்ஸவம் நடைபெறுகிறது. 20 ஆம் தேதி விடையாற்றியுடன் உத்ஸவம் நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.