காரைக்காலில் அன்னதானம்
மேல்மருவத்தூா் அடிகளாா் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.


மேல்மருவத்தூா் அடிகளாா் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தஞ்சை மாவட்டத் தலைவா் வாசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
முன்னதாக, பக்தா்கள் ஆதிபராசக்தி மன்றக் கொடி ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக விழா நடைபெறுமிடத்துக்கு வந்தனா். அறிவுச்சுடா் சக்தி ஒளி புத்தகம், நோட்டுகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன. தொடா்ந்து, சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என்.திருமுருகன் அன்னதானத்தை தொடங்கிவைத்தாா்.
விழா ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க காரைக்கால் மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி, ஆதிபராசக்தி மன்ற ஆலோசகா் சிவகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...