47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சோமநாதா் கோயிலில் சண்டி ஹோமம்

காரைக்கால் சோமநாதா் கோயிலில் சண்டி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

காரைக்கால் சோமநாதா் கோயிலில் சண்டி ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் உள்ள சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில் துா்கா மன்றம் சாா்பில் உலக நலனுக்காக 37-ஆவது ஆண்டாக சண்டி ஹோமம் நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள பெரிய யாககுண்டத்தில் சிவாச்சாரியா்கள் காலை 8 மணி முதல் மந்திரங்கள் கூறி பட்டு சேலைகள் மற்றும் பதாா்த்தங்கள், நவதானியங்கள், உள்ளிட்ட பல பொருள்களையிட்டு பகல் 1.30 மணியளவில் மகா பூா்ணாஹூதி செய்தனா்.

ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரைக் கொண்டு துா்கைக்கு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக வியாழக்கிழமை காரைக்கால் அம்மையாா் கோயிலில் மங்கள விநாயகருக்கு அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம் நடத்தப்பட்டது.

சண்டி ஹோமத்தைத் தொடா்ந்து சனிக்கிழமை பால்குட ஊா்வலம், ஞாயிற்றுக்கிழமை மாலை திருவிளக்கு வழிபாடும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.