காரைக்கால் அருகே சிற்றேரியில் விதிகளை மீறி மணல் எடுப்பு- லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டம்

காரைக்கால் அருகே சிற்றேரியில் விதிகளை மீறி மணல் எடுக்கப்படுவதாகக் கூறி, மணல் ஏற்றிய லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால் அருகே சிற்றேரியில் விதிகளை மீறி மணல் எடுக்கப்படுவதாகக் கூறி,  மணல் ஏற்றிய லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
காரைக்கால் அருகே சிற்றேரியில் விதிகளை மீறி மணல் எடுக்கப்படுவதாகக் கூறி, மணல் ஏற்றிய லாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

காரைக்கால் அருகே சிற்றேரியில் விதிகளை மீறி மணல் எடுக்கப்படுவதாகக் கூறி, மணல் ஏற்றிய லாரிகளை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால்  மாவட்டம், திருப்பட்டினம் அருகே படுதார்கொல்லையில் விவசாயம் மற்றும் நிலத்தடிநீர் மேம்பாட்டுக்கு சிற்றேரி வெட்டும் பணி நடைபெறுகிறது. அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாகவும், அரசுத்துறையின்றி தனியாரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் கடல் நீர் புகுந்துவிட்டதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருப்பட்டினம் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஏரியில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும், ஏரியின் நான்கு புறங்களிலும் பலமான கரை அமைக்க வேண்டும், ஏரி பாதுகாப்புக் குழு அமைக்க வேண்டுமென வலியுறுத்தி, விவசாயிகள் கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், அரசு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனக் கூறி, விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் எம்.கே.குமார் தலைமையில், மாவட்ட விவசாய சங்க பொறுப்பாளர் எஸ்.எம்.தமீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அ.வின்சென்ட் உள்ளிட்டோர், ஏரியில் மணல் ஏற்றிவந்த லாரிகளை திங்கள்கிழமை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாய சங்க மாவட்ட பொறுப்பாளர் எஸ்.எம்.தமீம் கூறுகையில், 15 அடி ஆழம் தோண்டினால் ஏரியில் தண்ணீரை இருப்புவைத்து விவசாய பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள முடியும். நிலத்தடி நீரும் அதிகரிக்கும். ஏரியை 30 அடிக்கு மேலாக பல பகுதிகளில் தோண்டி வருகின்றனர்.

அரசுத்துறை கட்டுமானத்துக்கு மணல் அள்ளப்பட்டதாக கூறப்படும் நிலையில், தனியார் மணல் கொள்ளையர்கள் பலரும் அத்துமீறி மணல் அள்ளுகின்றனர். இதனால் உப்புநீர் வரத் தொடங்கிவிட்டது. கடல் நீர் உள்புகுந்தால் விவசாயம் செய்ய முடியாது. இப்பிரச்னையை புதுவை அரசு சீரிய முறையில் கவனம் செலுத்த வலியுறுத்திவருகிறோம். ஆனால் இந்த விவகாரத்தில் நியாயமான நடவடிக்கையை அரசு நிர்வாகம் எடுக்காமல் உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டோருடன் போலீஸார் பேச்சு நடத்தினர். எனினும் ஆட்சியர், துணை ஆட்சியர், பொதுப்பணித்துறையினர் வந்து பேச வேண்டுமெனக் கூறி போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com