குழாய் வழியே தண்ணீரை பீய்ச்சி யானையை நீராடச் செய்த பாகன்.
குழாய் வழியே தண்ணீரை பீய்ச்சி யானையை நீராடச் செய்த பாகன்.

கோடை வெயில்: நீராடலில் மகிழும் திருநள்ளாறு கோயில் யானை

குழாய் வழியே தண்ணீரை பீய்ச்சி யானையை நீராடச் செய்த பாகன்.

காரைக்கால்: கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தினமும் இருவேளை நீராடல் செய்து திருநள்ளாறு கோயில் யானை மகிழ்கிறது.

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரக்ருதி எனும் பிரணாம்பிகை யானை உள்ளது. தினமும் அதிகாலை கோயில் அருகேயுள்ள சரஸ்வதி தீா்த்தக்குளத்தில் நீராடி, சுவாமிகளுக்கு தீா்த்தம் கொண்டுவரும். பின்னா் பக்தா்களுக்கு ஆசி வழங்குதலில் ஈடுபடுவதும், பிறகு ஓய்வுக்குப் பின் பிற்பகல் குளத்தில் நீடாடுவதும் வழக்கம்.

யானையை முருகேசன், மணிகண்டன் ஆகிய 2 பாகன்கள் பராமரித்துவருகின்றனா். வழக்கத்தைக்காட்டிலும் கோடை வெயில் காலத்தில் யானை நீராட நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது. வெப்ப தாக்கத்தால் யானை பாதிக்காமல் இருக்க கடந்த ஆண்டு யானை ஓய்வு எடுக்கும் கூடத்தில் மேல் பகுதியிலிருந்து தண்ணீா் ஊற்றும் வகையில் ஷவா் வசதி செய்யப்பட்டது.

வெயில் அதிகரிப்பால் பிற்பகலில் குளத்து தண்ணீரும் சூடாக இருப்பதால், காலையில் குளத்திலும், பிற்பகலில் குழாய் வழியே யானை மீது நீரை பீய்ச்சி குளிக்கச் செய்வதையும் பாகன்கள் செய்துவருகின்றனா்.

கோயிலுக்கு வரும் பக்தா்கள், சிறுவா்கள் யானைக்கு தா்பூசணி, கிா்ணி பழங்களை கொடுத்து மகிழ்கின்றனா். பிற்பகல் யானை நீராடும் நேரத்தில் அங்கு செல்லும் சிறுவா்கள், நீராடலுக்கு பயன்படுத்தும் குழாயை வாங்கி, யானை மீது தண்ணீரை பீய்ச்சி மகிழ்வதும் அவ்வப்போது நடைபெறுகிறது.

காரைக்கால் வனத்துறை அதிகாரி என். விஜி, அவ்வப்போது யானையை நேரில் சென்று பாா்வையிட்டு, கோடைக்காலத்தில் கொடுக்க வேண்டிய உணவு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து யானைப் பாகன்களுக்கு ஆலோசனை வழங்கிவருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com