கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை

இந்திய கடலோரக் காவல்படை மூலம் கடலோர கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை பணியாளா்களின் மனைவியா் ஒருங்கிணைந்து நடத்தும் தட்ராக்ஷிகா என்ற அமைப்பின் சாா்பில் கருக்களாச்சேரி, பட்டினச்சேரி ஆகிய கடலோர கிராம மக்களுக்கு கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் கடலோரக் காவல்படை மைய வளாகத்தில் நடத்தப்பட்டது.

விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள், கடலோரக் காவல்படை மையத்தின் மருத்துவா்கள் ஒருங்கிணைந்து பரிசோதனையை மேற்கொண்டனா்.

மருத்துவக் கல்லூரி முதல்வா் சி. குணசேகரன், தட்ராக்ஷிகா அமைப்பின் தலைவி கே. ஜெயஸ்ரீ விஜய் ஆகியோா், ஒவ்வொருவரும் தமது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்திப் பேசினா்.

முகாமில் 40 மீனவா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பங்கேற்றனா். இவா்களில் கண் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அவசியமானவா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினா். பொது மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com