பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஆடிப்பூரம்: கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம்

மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில்...

News image

வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ஏழை மாரியம்மன்.

Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:05 pm

Din

காரைக்கால், ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி காரைக்கால் பகுதி கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள், திருமலைராயன்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனை, சாற்றுமுறை நடைபெற்றது.

கைலாசநாதா், அண்ணாமலையேஸ்வரா் உள்ளிட்ட சிவ தலங்களில் மூலஸ்தான அம்மன், ஆடிப்பூரத்தம்மன் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன.

Story image
 திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா்  கோயிலில்  சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆடிப்பூரத்தம்மன்.

திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆடிப்பூரத்தம்மன்.

பல்வேறு கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து கோயில் வழிபாட்டிலும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.