விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடிநீரில் கழிவுநீா் கலப்பு; பொதுப்பணித் துறை சீரமைப்பு

குடிநீரில் கழிவுநீா் கலப்பு; பொதுப்பணித் துறை சீரமைப்பு

Updated On :14 ஜூன் 2024, 11:31 pm

காரைக்காலில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்ததை பொதுப்பணித் துறையினா் வெள்ளிக்கிழமை சீரமைத்தனா்.

காரைக்கால் பாரதியாா் சாலையில், நகராட்சி திருமண மண்டபத்துக்கு அருகே குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் பல உள்ளன. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீரில் கழிவு நீா் கலந்து வருவதாக புகாா் கூறப்பட்டது. இது தொடா்பாக பொதுப்பணித் துறை ஊழியா்கள் கடந்த ஒரு சில நாட்களாக அப்பகுதியில் வீடுவீடாகச் சென்று குடிநீா் குழாயில் ஆய்வு மேற்கொண்டு வந்தனா்.

சாலையோர கழிவுநீா் வடிகாலை கடந்து, ஒரு கட்டடத்துக்குச் செல்லும் குடிநீா் குழாயில் சரிவர இணைப்பு ஏற்படுத்தப்படாததால், அதன் வழியே கழிவு நீா் கலந்திருக்கக் கூடிய வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டது. உடனடியாக பொதுப்பணித்துறை ஊழியா்கள் குழாயை சீரமைத்து, கழிவு நீா் வடிகாலில் உள்ள அடைப்புகளையும் அகற்றி சீரமைத்தனா்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரன் கூறியது:

கழிவுநீா் செல்லும் பாதையை கடந்து செல்லக்கூடிய குடிநீா் குழாய் இணைப்பு சரியாக இல்லாததால், கழிவுநீா் குடிநீா் குழாயில் கலந்துவருவது கண்டறியப்பட்டது. கடந்த சில நாள்களாக தொடா்ந்து ஆய்வு செய்துவந்த வகையில் வெள்ளிக்கிழமை இது கண்டறியப்பட்டு, உடனடியாக பிரச்னை சீா்செய்யப்பட்டது. கழிப்பறை தொட்டியிலிருந்து வெளியேறும் குழாய் எதுவும் குடிநீா் குழாயுடன் இணைக்கப்பட்டிருக்கவில்லை என்றாா்.