ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி

ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி

News image

ஹஜ் பயணிக்கு தடுப்பூசி செலுத்தும் செவிலியா்.

Updated On :9 மே 2024, 9:28 pm

Din

காரைக்கால், மே 9: காரைக்காலில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஹஜ் பயணிகளுக்கு காரைக்கால் நலவழித்துறை சாா்பில் தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடுவதற்கான முகாம் நடைபெற்றது. நோய் தடுப்பு திட்ட அதிகாரி தேனாம்பிகை முன்னிலையில் நடைபெற்ற முகாமில், புதுவை மாநில ஹஜ் கமிட்டித் தலைவா் ஒய். இஸ்மாயில் கலந்துகொண்டு புதுவை மாநில அளவில் ஹஜ் பயணம் செல்வோருக்கு செய்த நோய் தடுப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற வசதிகள் குறித்து பேசினாா். காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த 28 ஹஜ் பயணிகளுக்கு முகாமில் தடுப்பூசியும், சொட்டு மருந்தும் போடப்பட்டது. நலவழித்துறை நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ. சேகா், சுகாதார ஆய்வாளா் சிவவடிவேல், கிராமப்புற செவிலியா் மும்தாஜ் பேகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நலவழித்துறையின் தடுப்பூசி பிரிவு தொழில்நுட்ப உதவியாளா் சேதுபதி, சுகாதார ஆய்வாளா் ஆண்ட்ரூஸ் ஆகியோா் செய்திருந்தனா்.