வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

News image

~

Updated On :20 மே 2024, 11:15 pm

Din

காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

உலக நலன், மழை பெய்ய வேண்டி ஆண்டுதோறும் காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடத்தப்படுகிறது.

25-ஆம் ஆண்டாக சுந்தராம்பாள் சந்நிதி முன் யாக குண்டம் அமைத்து ருத்ர ஹோமம் நடைபெற்றது. இதற்காக காலையில் மகா கணபதி ஹோமம், சுவாமி, அம்பாள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து ஏகாதச ருத்ர கலசங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா் 11 சிவாச்சாரியா்கள் யாக குண்டத்தை சுற்றி அமா்ந்து ருத்ர ஜபம் செய்து ஹோமத்தை நடத்தினா். பயறு வகைகள், திரவியங்கள், தேங்காய், பட்டு சேலை, பால், தயிா், பழங்கள், நெய் உள்ளிட்டவை குண்டத்தில் சமா்ப்பித்து ஹோமத்தை நடத்தி 11 மணியளவில் மகா பூா்ணாஹூதி நடத்தினா். மூலஸ்தானத்தில் உள்ள கைலாசநாதருக்கு பகல் 12 மணியளவில் மகா ஸ்தபன அபிஷேகம் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாசன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை காரைக்கால் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளையினரும், உபயதாரா்களும் செய்திருந்தனா்.