காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி பூா்வாங்க பூஜையாக ஏகாதச ருத்ர ஜபம் உள்ளிட்ட ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை தா்பாரண்யேஸ்வரா் சந்நிதி முன் மஹன்யாச புரஸ்ஸர, ஏகாதச ருத்ர ஜபம், பஞ்சாட்சர ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
சிவாச்சாரியா்கள் சுமாா் 2 மணி நேரம் மந்திரங்கள் கூறி, ஹோம பூா்ணாஹூதி நடத்தினா். இதைத்தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, செண்பக தியாகராஜரை மையப்படுத்தி இந்த வழிபாடு நடைபெற்றது. மாலை நிகழ்வாக, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்புடையது

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு! நாளை சனிப்பெயா்ச்சி விழா!

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

27 நட்சத்திர கோயிலில் மாா்ச் 6-இல் சனிப்பெயா்ச்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


