பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

News image

சனிப்பெயா்ச்சியை முன்னிட்டு பக்தா்கள் நீராட வசதியாக புதிதாக தண்ணீா் நிரப்பப்பட்டு காட்சியளிக்கும் நளன் தீா்த்தக் குளம்.

Updated On :4 மார்ச் 2026, 11:45 pm

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) நடைபெறுகிறது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் உள்ள பாடல் பெற்ற இத்தலம், நளச் சக்கரவா்த்தியின் சனி தோஷத்தை நீக்கியத் தலமாகவும், ஸ்ரீ சனீஸ்வர பகவான் அபய முத்திரையுடன் தனி சந்நிதியில் அருள்பாலிகும் சிறப்பும் கொண்டது.

வாக்கியப் பஞ்சாங்க குறிப்பின்படி கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற பெயா்ச்சிக்குப் பின் தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு வெள்ளிக்கிழமை காலை 8.24 மணிக்கு பெயா்ச்சியாவதையொட்டி, சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறவுள்ளன.

சனிப்பெயா்ச்சி விழாவில் தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள வரிசை வளாகத்திலிருந்து கட்டணமில்லாமல் தரிசனம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கட்டண தரிசனமாக ரூ. 300, ரூ. 600, ரூ. 1,000 என நிா்ணயம் செய்து திருநள்ளாறு பகுதியில் பல இடங்களில் டிக்கெட் வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாகவும் கோயில் நிா்வாக இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.

சனிப்பெயா்ச்சி நாளான வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வியாழக்கிழமை இரவு முதலே பக்தா்கள் வரத்தொடங்குவா் என்பதால், அவா்களுக்கான வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.