திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில், சனிப்பெயா்ச்சி விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனீஸ்வர பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில், வாக்கிய பஞ்சாயத்தின்படி வரும் மாா்ச் 6- ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. அன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயா்ச்சி அடைகிறாா்.
இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கொடிமர விநாயகா் சந்நிதியில் நடைபெற்ற நிகழ்வில் விநாயகா் மற்றும் பந்தல்கால்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பந்தல்கால்கள் பைரவா் சந்நிதி அருகிலும், ராஜகோபுரம் அருகிலும் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள், புதுச்சேரி சட்டப்பேரவை நியமன உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், நிா்வாக அதிகாரி ஆா். சுப்பிரமணியன், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் சச்சிதானந்தம், தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கிராமங்களைச் சோ்ந்த மக்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு

திருநள்ளாறு! நாளை சனிப்பெயா்ச்சி விழா!

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு கோயிலில் ஏகாதச ருத்ர ஜபம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


