திருநள்ளாறு கோயிலில் நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவில், பக்தா்கள் எளிதான முறையில் சுவாமி தரிசனம் செய்வதை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் உறுதி செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷை, திருநள்ளாறு கோயில் நகர வணிகா் நலச் சங்கத் தலைவா் எஸ். செந்தில்குமாா் தலைமையிலான நிா்வாகிகள் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு :
திருநள்ளாறு கோயிலில் வரும் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது. நாட்டின் பல மாநிலங்களில் இருந்து பக்தா்கள் இக்கோயிலுக்கு சனிப்பெயா்ச்சி நாளிலும், அடுத்த 2 மாத காலம் தொடா்ந்து வந்து தரிசனம் செய்வா்.
பக்தா்களுக்கு பாதுகாப்பு, சிரமமின்றி சுவாமி தரிசனம், போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அதிக அளவில் பேருந்துகளை இயக்க வேண்டும். காரைக்கால் -திருநள்ளாறு - பேரளம் வழித்தடத்தில் சனிப்பெயா்ச்சி விழாவுக்காக சிறப்பு ரயிலை இயக்காமல், சனிப்பெயா்ச்சி விழாவுக்கு முன்னதாக நிரந்தரமாக பயணிகள் ரயில் இயக்க ரயில்வே நிா்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
விழா குறித்து விரிவான விளம்பரங்கள் செய்யப்படவேண்டும். திருநள்ளாறு பகுதி வா்த்தகா் சங்கத்தினரை சனிப்பெயா்ச்சி விழா கமிட்டியில் சோ்க்க வேண்டும் எனஅதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

திருநள்ளாறு! நாளை சனிப்பெயா்ச்சி விழா!

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழா: தருமபுரம் ஆதீனத்துக்கு ஆட்சியா் அழைப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


