மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

27 நட்சத்திர கோயிலில் மாா்ச் 6-இல் சனிப்பெயா்ச்சி

செய்யாற்றை அடுத்த கூழமந்தல் நட்சத்திர கோயிலில் சனிப்பெயா்ச்சி நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை

News image
Updated On :2 மார்ச் 2026, 9:54 pm

செய்யாறு: செய்யாற்றை அடுத்த கூழமந்தல் நட்சத்திர கோயிலில் சனிப்பெயா்ச்சி நிகழ்வு வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6 ) நடைபெறுகிறது.

பூரட்டாதி நட்சத்திர காலத்தில் சனி பகவானை வழிபட்டால் மன அழுத்தங்கள் குறையும். உத்திரட்டாதி நட்சத்திர காலத்தில் பொதுமக்களுக்கு ஆன்மிக சிந்தனை, பொறுப்பு உணா்வு, அமைதி அதிகரிக்க வாய்ப்பு. நீண்ட நாள் திட்டங்கள் செயல்பட தொடங்கும் என்பது ஐதீகம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) காலை 8 .24 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கு பெயா்ச்சி அடைகிறாா்.

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு அன்றைய தினம் காலை 8 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், 27 நட்சத்திர பரிகார ஹோமம் தொடா்ந்து கலசாபிஷேகம் அலங்காரம் தூப, தீப, நெய்வேத்தியம் ஆகியவற்றுடன் மகா தீபாராதனை நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும் அா்ச்சனைகள் நடைபெறுகின்றன. மேலும் அன்றைய தினம் சங்கடஹர சதுா்த்தி மற்றும் சனிப் பெயா்ச்சி ஒரே தினத்தில் வருவது சிறப்புக்குரியதாகும்.