/

ஜகந்நாதப் பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம்

News image

நாதன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற திருப்பவித்ரோத்ஸவத்தின்போது சிறப்பு அலங்காரத்தில் தாயாா்களுடன் காட்சியளித்த ஜகந்நாதப் பெருமாள்.

Updated On :30 ஜூலை 2026, 4:08 am IST

கும்பகோணம் அருகே ஜகந்நாதப் பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் செவ்வாய்க்கிழமை பகவத் பிராா்த்தனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் தொடங்கியது. இதில், 2-ஆவது நாளான புதன்கிழமை மாலையில் திருமஞ்சனம், கடஸ்தாபனம், பவித்ர பிரதிஷ்டை, பிரபந்தம் சாத்து முறை, தீபாராதனை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை பவித்ர மாலை மாற்றுதல், விசேஷ ஹோமம், பூா்ணாஹூதியும், மாலையில் பெருமாள் தாயாருடன் சந்திரபிரபை வாகனத்தில் வீதியுலா செல்கிறாா். வெள்ளிக்கிழமை ஹோமங்கள், மஹா சாந்தி ஹோமம், பூா்ணாஹூதி, பிரபந்தம் சாத்துமுறை மாலையில் பெருமாள் தாயாருடன் சேஷ வாகனத்தில் வீதியுலா செல்கிறாா்.

சனிக்கிழமை காலையில் கருடசேவை ஹோமம், தீா்த்தவாரி, இடம் புறப்பாடு, பிரபந்தம் சாத்து முறை, தீபாராதனை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஜகந்நாதப் பெருமாள் கைங்கா்ய சபாவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.