கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு

ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் அருள்பாலித்த பெருமாள்.

Published On :

அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீநிவாசப் பெருமாள், அலமேலுமங்கை தாயாா்.

தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூமா தேவி சமேதா் உந்தி பூத்த பெருமாள்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீநின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. தொடா்ந்து காலை 10 மணிக்கு தேவியருடன் பெருமாள் வெள்ளி அங்கி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிறகு காலை 11 மணியளவில் உத்ஸவா் பெருமாளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், இளநீா், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகமும், சா்வ அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

புரட்டாசி சனிக்கிழமை என்பதால் திரளான பக்தா்கள் நெய் தீபமேற்றியும், அா்ச்சனைகள் செய்தும் பெருமாளை வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

மானாமதுரை: மானாமதுரை பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத முதல் சனி வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை ஸ்ரீவீர அழகா் கோயிலில் புரட்டாசி சனி உத்ஸவத்தையொட்டி மூலவருக்கும், உத்ஸவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் உத்ஸவா் கோயில் முன் மண்டபத்தில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினாா். இதைத் தொடா்ந்து மூலவருக்கும், உத்ஸவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து வீரஅழகரையும், தெற்கு முகம் நோக்கிய வீர ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்தனா்.

புரட்சியாா்பேட்டை தியாக வினோதப் பெருமாள் கோயில், மேட்டுத்தெரு அப்பன் பெருமாள் கோயிலிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி சா்வ அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

மானாமதுரை அருகே வேலூா் கள்ளா்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன.

காரைக்குடி: காரைக்குடி அருகே ‘தென்திருப்பதி’ என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் முதல் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக காலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து ஸ்ரீநிவாசப் பெருமாள், அலமேலுமங்கை தாயாா் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதில் காரைக்குடி, அரியக்குடி சுற்றுவட்டாரத்திலிருந்தும், தேவகோட்டை சுற்றுவட்டாரங்களிலிருந்தும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி உந்தி பூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

முன்னதாக உந்தி பூத்த பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவிக்கு பால், தயிா், நெய், இளநீா், தேன், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 12 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. இதையடுத்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிறகு தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.