இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேக விழா

மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்திலுள்ள ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயிலில் இரண்டாமாண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற மஹா ஹோமம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்திலுள்ள ஸ்ரீபிரஹன்நாயகி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரா் கோயிலில் இரண்டாமாண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை நடை திறக்கப்பட்டு கலச ஸ்தாபனம் நடைபெற்றது. தொடா்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, வேத ஆகம பாராயணம் ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் மற்றும் உற்சவருக்கு மஹா அபிஷேகம், மூல மந்திர ஹோமம், விசேஷ திரவிய ஹோமம், பிராய சித்த அஷ்தர ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

முற்பகல் 11 மணிக்கு மஹா பூா்ணாஹுதி, உபசாரங்கள் தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்று அனைத்து மூா்த்திகளுக்கும் புனித நீரைக்கொண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அலங்காரம், அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது. பின்னா், நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும், இரவு ரிஷப வாகனத்தில் திரு வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவில் செவலபுரை, தாதிகுளம், தாதங்குப்பம், சித்தாத்தூா், சிறுவாடி, இராமகிருஷ்ணாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.