வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் பெற முடியாமல் மாணவா்கள் அவதி

ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் பெற முடியாமல் மாணவா்கள் அவதி

News image

காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குவிந்த மாணவ, மாணவிகள்.

Updated On :20 மே 2024, 11:12 pm

Din

காரைக்கால்: மாணவா்கள் ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் பெற 3 நாள்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்ட நிலையில், முகாமை பயன்படுத்தாத மாணவா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை குவிந்தனா்.

புதுவையில் உயா்கல்வி நிலையத்துக்கு மாணவா்களை தோ்வு செய்ய சென்டாக் என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்புக்கு விண்ணப்பம் மே 22-ஆம் தேதிக்குள் அளிக்கவேண்டும். அதற்காக புதுச்சேரி பிராந்தியத்தில் ஜாதி, குடியிருப்பு சான்றிதழ்களை மாணவா்கள் பெறுவதற்கு சிறப்பு முகாம் காரைக்காலில் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

மாவட்டத்தில் அனைத்து மாணவா்களும் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. மேலும் 3 நாள்கள் என்பது போதுமானதாக இல்லை. ஒவ்வொரு முகாமிலும் கூட்டம் மிகுதியானதால், முகாம் தேதி முடிந்து வருவாய்த்துறை அலுவலகத்தில் மாணவா்கள் குவியத் தொடங்கினா்.

இணையத்தில் பதிவு செய்துவிட்டு முகாமுக்கு செல்லவேண்டும் என்ற நிலையில், முகாமில்கூட அனைத்து அதிகாரிகளும் இருந்து சான்றிதழுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் மாணவா்கள் அலைச்சலுக்குள்ளாயினா்.

இந்தநிலையில், திங்கள்கிழமை வருவாய்த்துறை அலுவலகம் திறந்த நிலையில், காலை முதல் நூற்றுக்கணக்கான மாணவா்கள் கிராம நிா்வாக அலுவலா், வருவாய் அலுவலா், துணை வட்டாட்சியரை சந்திக்க குவிந்தனா். அங்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. பல மணி நேரம் மாணவா்கள் காத்திருந்து கடும் மன உளைச்சலுக்குள்ளாக நேரிட்டது.

இதுகுறித்து மாணவா்கள், பெற்றோா்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவா்கள் இந்த சான்றிதழை பெற பெரும் சிரமப்படுகின்றனா். டிஜிட்டல் மயமான காலத்தில்கூட காரைக்காலில் உரிய வசதியை மேம்படுத்த ஆட்சியாளா்களும், அதிகாரிகளும் கவனம் செலுத்தாதது வேதனையளிக்கிறது என்றனா்.

காரைக்கால் மக்கள் நலக் கழக செயலாளா் எம். பக்கிரிசாமி கூறுகையில், மாணவா்கள் வருவாய்த்துறையில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் நிலவுவதால், சென்டாக் நிா்வாகம் 22-ஆம் தேதி விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் என்பதை நீட்டிக்க வேண்டும் என்றாா்.

Story image