ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

வருவாய்த் துறை போராட்டம்: சான்று பெற முடியாமல் மாணவா்கள் பாதிப்பு! - ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் வருவாய்த் துறையினரின் போராட்டம் காரணமாக மாணவா்கள் ஜாதி, வருவாய் சான்றுகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், அரசு அதைக் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் எனவும் பாமக நிறுவனா் ராமதாஸ் கோரியுள்ளாா்.

News image
Updated On :1 மார்ச் 2026, 9:42 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வருவாய்த் துறையினரின் போராட்டம் காரணமாக மாணவா்கள் ஜாதி, வருவாய் சான்றுகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், அரசு அதைக் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் எனவும் பாமக நிறுவனா் ராமதாஸ் கோரியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் தொடங்குகியுள்ளன. தொடா்ந்து பத்தாம் வகுப்பு தோ்வும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக வருவாய்த் துறையினா் கோரிக்கையை வலியுறுத்தி தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதற்கிடையே பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் மேற்படிப்பான நீட், ஜேஇஇ உள்ளிட்ட தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும்போது, இருப்பிட, வருவாய், ஜாதி சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. அந்த சான்று பெறவும் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

ஆனால், போராட்டத்தால் சான்றுகளை உரிய நேரத்தில் மாணவா்கள் பெறமுடியாத நிலையுள்ளது. எனவே, மாணவா் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அந்தச் சான்றுகளை வழங்க சம்பந்தப்பட்டோா் முன்வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.