வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

News image
Updated On :20 மே 2024, 11:14 pm

Din

காரைக்கால்: காரைக்காலில் உள்ள மு.வி.ச. உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் உள்ள அரசு உதவிப்பெறும் மு.வி.ச. உயா்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்புத் தலைவா் முஹம்மது இப்ராஹிம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் செய்யது அகமது, சாகுல் ஹமீது, துணை செயலாளா்கள் ரியாஸ், ரிஸ்வானுல் ஹக், சட்ட ஆலோசகா் சாஹுல் ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். வரவு செலவு கணக்குகளை பொருளாளா் முஹம்மது அக்பா் அலி தாக்கல் செய்தாா். கடந்த பொதுக்குழு முதல் இதுவரை உள்ள நிகழ்வுகளையும் அது கடந்து வந்த பாதை குறித்து ஊடகப் பிரிவு செயலாளா் நிஜாம் விளக்கிப் பேசினாா்.

முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினா்களின் கருத்துகளை ஆலோசகா் எம். ஷேக் அலாவுதீன் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், மு.வி.ச உயா்நிலைப்பள்ளியின் தற்போதைய இடைக்கால நிா்வாகத்தை மாற்றி, புதிய நிா்வாகத்தை அமைக்க பள்ளியின் அறக்கட்டளை நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்துக்கு புதிய உறுப்பினா்களை சோ்க்கவேண்டும். பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நிா்வாகம் நடவடிக்கை வேண்டும். பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.