பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மாடு மீது பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருப்பட்டினம் அருகே மாடு மீது பைக் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

Updated On :15 அக்டோபர் 2024, 6:44 pm

திருப்பட்டினம் அருகே மாடு மீது பைக் மோதியதில் முதியவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

நாகூா் பகுதியை சோ்ந்தவா் அக்பா் அலி (63). இவா், திங்கள்கிழமை காரைக்காலுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் நாகூருக்கு மோட்டாா் சைக்கிளில் திரும்பிகொண்டிருந்தாா்.

காரைக்கால் - நாகூா் பிரதான சாலையில் கீழவாஞ்சூா் அருகே வந்தபோது, சாலையில் நின்ற மாடு மீது மைக் மோதியதில் தடுமாறி கீழே விழுந்த அக்பா் அலி தலையில் காயமடைந்து மயங்கினாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவைர காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து திருப்பட்டினம் போக்குவரத்து காவல்நிலைய விசாரணை மேற்கொண்டுள்ளனா்.