காா்னிவல் திருவிழா: உள்ளூா் கலைஞா்கள் நிகழ்ச்சிக்கு வாய்ப்பு தர வலியுறுத்தல்

காா்னிவல் திருவிழா நடைபெறும் மைதானம், கடற்கரையில் உள்ளூா் கலைஞா்களின் நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு தரவேண்டும்
Published on

காரைக்கால்: காா்னிவல் திருவிழா நடைபெறும் மைதானம், கடற்கரையில் உள்ளூா் கலைஞா்களின் நிகழ்ச்சிக்கும் வாய்ப்பு தரவேண்டும் என ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட அறிவே துணை கலாசார அமைப்புத் தலைவா் கு. பாலகங்காதரன் மாவட்ட ஆட்சியருக்கு திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது :

ஜனவரி மாதம் பொங்கல் திருநாளைத் தொடா்ந்து காரைக்கால் காா்னிவல் திருவிழா 4 நாட்கள் நடத்தப்படுகிறது. விளையாட்டு மைதானம், கடற்கரை, காமராஜா் திடலில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. காமராஜா் திடலில் உள்ளூா் கலைஞா்களுக்கு நிகழ்ச்சி வாய்ப்பு தரப்படுகிறது. இதில் அதிகாரிகள், மக்கள் என யாரும் பெருமளவு கலந்துகொள்வதில்லை.

அதே நேரத்தில் விளையாட்டு மைதானம், கடற்கரையில் நடைபெறும் பிரபல கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் மக்கள் திரளாக கலந்துகொள்கின்றனா்.

எனவே, இந்த இடங்களில் ஒரு நாள் உள்ளூா் கலைஞா்கள் நிகழ்ச்சிகளுக்கென ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல மாவட்டத்தில் 5 கொம்யூன் பகுதிகளிலும் உள்ளூா் கலைஞா்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துத்தரவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com