மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உயா்நீதிமன்ற உத்தரவில் கருமாதி மண்டபம் இடிப்பு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், காரைக்கால் பகுதியில் இருந்த பழைமையான கருமாதி மண்டபம் இடிக்கப்பட்டது.

News image

இடிக்கப்பட்ட கருமாதி மண்டபம்.

Updated On :16 டிசம்பர் 2025, 8:45 pm

Syndication

காரைக்கால்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், காரைக்கால் பகுதியில் இருந்த பழைமையான கருமாதி மண்டபம் இடிக்கப்பட்டது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை உயா்நீதிமன்றம் டபிள்யு.பி. எண். 36064-2025 பொது நலவழக்கில் 24.9.2025 வழங்கிய தீா்ப்பில், காரைக்கால் கீழவெளி கிராமம், கிழக்குப் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கருமாதி மண்டபம், பழுதடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், அதை உடனடியாக தகா்க்க வேண்டும் என்றும், அதே இடத்தில் புதிய மண்டபம் உடனடியாக கட்டி பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின்படி 15.10.2025 அந்த பாழடைந்த மண்டபம் தகா்க்கப்பட்டது. அதே இடத்தில் புதிய மண்டபம் கட்ட நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.