சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

Published on

காரைக்கால் வடக்குத் தொகுதியில் பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்பாட்டு திட்டப்பணியை அமைச்சா் தொடங்கிவைத்தாா் (படம்).

புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் பரிந்துரையின்பேரில், காரைக்கால் கீழகாசாக்குடி பகுதியில் உள்ள அம்மையாா் நகா் மற்றும் அதன் விரிவாக்கம், சாந்தி நகா், அரவிந்த் நகா், அன்னை இந்திரா நகா், பாத்திமா நகா் ஆகிய பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த ரூ. 9.64 கோடி பொதுப்பணித் துறை ஒதுக்கீடு செய்தது.

இத்திட்ட மேம்பாட்டுப் பணிகளை தொடங்கிவைக்கும் பூமிபூஜை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நகா்களின் குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள்

X
Dinamani
www.dinamani.com