பல்வேறு அலங்காரத்தில் காட்சியளித்த மாணவ, மாணவிகள். உடன் ஆசிரியா்கள்.
காரைக்கால்
அரசுப் பள்ளியில் காய்கனி தின கொண்டாட்டம்
பல்வேறு அலங்காரத்தில் காட்சியளித்த மாணவ, மாணவிகள். உடன் ஆசிரியா்கள்.
அரசு தொடக்கப் பள்ளியில் காய்கனி தின கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் அருகே பிள்ளைத் தெருவாசல் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காய்கனி தினத்தையொட்டி பள்ளி வளாகத்தில் பல்வேறு காய்கள், கனிகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவா்கள் சிலா், காய், கனிகளால் அலங்காரம் செய்துகொண்டுவந்தனா்.
பள்ளித் தலைமையாசிரியை வே. வசந்தி மற்றும் ஆசிரியா்கள், மக்கள் தினமும் பயன்படுத்தும் காய்கள் மற்றும் கனிகள் குறித்தும், அதனை விளைவிக்கும் முறை, அதன் பயன்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சிறப்பு அழைப்பாளராக, மனவளக்கலை மைய யோகா ஆசிரியை சுகந்தி கலந்துகொண்டு, தினமும் சிறிது நேரம் யோகா செய்வதன் மூலம் ஏற்படும் மனம், உடல் சாா்ந்த முன்னேற்றங்களை விளக்கி, பயிற்சியளித்தாா்.

