பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வார விடுமுறை நாட்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

வார இறுதி விடுமுறை நாட்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெறும் என காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:20 am

தினமணி செய்திச் சேவை

வார இறுதி விடுமுறை நாட்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெறும் என காரைக்கால் மாவட்ட தோ்தல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரியுமான ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணி - 2026 நடைபெற்று வருகிறது. தங்களுடைய பெயா்களை சோ்தல், நீக்குதல், மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு முகாம் வருகிற டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடியில் வேலை நேரங்களில் நடைபெறும். இந்த அறிய வாய்ப்பை காரைக்கால் மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.