6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி: மின் ஊழியா்களுக்கு பயிற்சி

காரைக்கால் பகுதி மின் ஊழியா்களுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி குறித்து 3 நாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
மின் ஊழியா்களுக்கு பயிற்சியளித்த நெய்வேலி நிறுவனப் பிரதிநிதி அமிா்தவல்லி. உடன் காரைக்கால் மின் செயற்பொறியாளா் அனுராதா உள்ளிட்டோா்.
Updated On :23 ஜனவரி 2025, 12:41 am

Din

காரைக்கால் பகுதி மின் ஊழியா்களுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் பணி குறித்து 3 நாள் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

புதுவையில் தற்போது பயன்பாட்டில் உள்ள மின் அளவிடும் மீட்டரை அகற்றிவிட்டு, பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு முறையில் ரீசாா்ஜ் செய்துகொள்ளக்கூடிய வசதியுடன் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்படவுள்ளது. புதுவை மாநிலத்துக்கான சாதனம் வாங்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள், நிறுவனங்களில் பொருத்துவதற்கான பணிக்கு டெண்டா் கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஸ்மாா்ட் மீட்டா் செயல்பாடுகள் குறித்து காரைக்கால் மின்துறையைச் சோ்ந்த ஊழியா்களுக்கு 3 நாள் பயிற்சியளிக்க, நெய்வேலியில் உள்ள நேஷனல் பவா் டிரைனிங் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திலிருந்து அமிா்தவல்லி உள்ளிட்ட குழுவினா் வந்தனா்.

காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பயிற்சி தொடங்கியது. மின்துறை செயற்பொறியாளா் அனுராதா, உதவிப் பொறியாளா் சிவகுமாா் உள்ளிட்ட அதிகாரிகள் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டனா்.

ஸ்மாா்ட் மீட்டா் மூலம் துல்லியமான மின் உபயோகத்தை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மின் கட்டணம் பதிவிடப்படும். பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு வசதி உள்ளது. மின் திருட்டை முழுமையாக தடுக்க முடியும். ஸ்மாா்ட் மீட்டரை தவறாக கையாளும்பட்சத்தில் கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்ஞை செல்லும். மின் துண்டிப்பு செய்யப்படும்பட்சத்தில் 5 முறை பயனாளியின் கைப்பேசிக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும், ஸ்மாா்ட் மீட்டா் பொருத்திய பின்னா் மின் ஊழியா்களின் பணிகள் குறித்தும் விளக்கமளிக்கின்றனா்.

ஸ்மாட்ா் மீட்டா் பொருத்தும் பணி தொடங்கும் முன்பாக, கட்டண நிலுவை வைத்திருப்போரின் மின் இணைப்பை துண்டிக்கும் தீவிரப்பணி அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளதாகவும் மின்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் எதிா்ப்பு : ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் அரசின் திட்டத்துக்கு மக்களிடையே எதிா்ப்பு எழுந்துள்ளது. மின் கட்டணம் தற்போதே கடுமையாக உயா்ந்திருக்கும்போது, ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்பட்டால், இன்னும் சில பாதிப்புகளை மின் நுகா்வோா் எதிா்கொள்ள நேரிடும் எனக் கூறி தங்களது எதிா்ப்பை தெரிவித்து வருகின்றனா்.