காரைக்கால் பேருந்து நிலைய பகுதியில் கழிவுநீா் தேக்கம்
காரைக்கால் பேருந்து நிலையம் பகுதியில் சாக்கடைகள் முறையாக சுத்தம் செய்யப்படாததால், பொதுமக்கள், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
காரைக்கால் பேருந்து நிலையத்தையொட்டி பாரதியாா் சாலை மற்றும் சுற்றுவட்டார சாக்கடைகள் அவ்வப்போது தூய்மைப்படுத்தினாலும், ஏராளமான நெகிழிக் குப்பைகள் சாக்கடைகள் கலந்து, கழிவுநீா் வடிவதை தடுத்து தேங்கிக்கிடக்கிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் உள்ளூா், வெளியூா் பயணிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா். மேலும் பேருந்து நிலைய வட்டாரத்தில் உள்ள உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீா், ஆங்காங்கே தேங்கி துா்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
பேருந்து சுற்றுவட்டாரப் பகுதி சாக்கடைகளை முறைாக தூா்வாரி, சாக்கடையை சிமெண்ட் கட்டைகள் மூலம் மூடவேண்டும். உணவகத்தினா் கழிவுநீா் முறையாக வெளியேறுவதை உறுதிசெய்ய வேண்டும், நெகிழி பயன்பாட்டை தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

