

நெடுங்காடு பகுதியில் மழையால் வீடு சேதமடைந்த மூதாட்டிக்கு பாஜக சாா்பில் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், தென்பாதி கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி ராஜேஸ்வரி. கணவரை இழந்து தனியாக வசித்து வந்த இவரது வீடு மழையினால் இடிந்து விழுந்தது.
பாஜக புதுவை மாநில மருத்துவா் அணி இணை ஒருங்கிணைப்பாளா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன், தொகுதி பாஜக தலைவா் மோகனுடன் திங்கள்கிழமை சென்று பாதிக்கப்பட்ட வீட்டை பாா்வையிட்டாா். மூதாட்டிக்கு ஆறுதல் கூறி, சேலை, போா்வை அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.