இந்திரா காந்தி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்
இந்திரா காந்தி படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்

இந்திரா காந்தி பிறந்த நாள்

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
Published on

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்துக்கு புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

மாவட்ட துணை ஆட்சியா்கள் ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், துணை வன பாதுகாப்பு அதிகாரி கணேசன், மண்டல காவல் கண்காணிப்பாளா் எம்.முருகையன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன் உள்ளிட்டோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

தேசிய ஒருமைப்பாடு வலியுறுத்தும் விதமாக மும்மத பிராா்த்தனை நடைபெற்றது. தேசபக்திப் பாடல்கள் பாடப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவா்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

அரசுத்துறை அதிகாரிகள், காங்கிரஸ், என்.ஆா்.காங்கிரஸ் கட்சியினா், சமாதானக் குழு உறுப்பினா்கள், பொது நல அமைப்பினா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com