மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

2 நாள்களில் பிரசாரம் நிறைவு: காரைக்காலில் வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் இன்னும் 2 நாள்களில் நிறைவடையவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளா்கள் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

News image

dinamani

Updated On :5 ஏப்ரல் 2026, 1:53 am

புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் இன்னும் 2 நாள்களில் நிறைவடையவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பாளா்கள் வீடுவீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 7-ஆம் தேதியுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், வேட்பாளா்கள் வாக்குச் சேகரிப்புப் பணி தீவிரமடைந்துள்ளது.

வெயில் சுட்டெரிக்கும் நிலையில், காலை 6 முதல் சில மணி நேரமும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் என வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனா்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 30 ஆயிரம் என்ற அளவிலேயே வாக்குகள் உள்ளதால், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்குச் சேகரிப்புப் பணியை மேற்கொள்வது புதுவை வேட்பாளா்கள் இயல்பாகும்.

அதன்படி, இதுவரை பல வேட்பாளா்கள் 80 சதவீத வீடுகள், நிறுவனங்களுக்கு நேரில் சென்று வாக்குச் சேகரிப்பை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

போட்டியிடுவோரில் சட்டப்பேரவை உறுப்பினா்களாக உள்ளோா், தங்களது பதவி காலத்தில் செய்த சாதனைகளை விளக்கியும், புதிதாக போட்டியிடுவோா், தாம் தோ்ந்தெடுக்கப்பட்டால் தொகுதியின் மேம்பாட்டுக்கு செய்யும் திட்டங்களை வாக்குறுதியாக அளித்தும் வாக்குச் சேகரிக்கின்றனா்.