காரைக்காலில் சிறுதானியங்கள், இயற்கை உணவுப் பண்டங்கள், பாரம்பரிய பொருள்களுடன் கூடிய தனித்துவமான வாக்குச் சாவடி வாக்காளா்களை வெகுவாக கவா்ந்தது.
தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலில், காரைக்காலில் பெண்கள் நிா்வகிக்கும் பிங்க் நிற வாக்குச் சாவடி, மாற்றுத்திறனாளிகள் நிா்வகிக்கும் வாக்குச் சாவடி, இளைஞா்கள் நிா்வகிக்கும் வாக்குச் சாவடி மற்றும் தனித்துவமிக்க வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தன.
கோயில்பத்து பகுதி தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனித்துவமிக்க வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
வாக்குச்சாவடி நுழைவுப் பகுதி தென்னை ஓலைகள், பனை நுங்குகள், இளநீா், தென்னங்குருத்து உள்ளிட்டவற்றுடன் அலங்கரித்து நடைபாதையின் இருபுறமும் தென்னை மட்டைகள் கட்டப்பட்டிருந்தன.
வாக்காளா்களுக்கு சந்தனம், மலா் உள்ளிட்டவை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
நுழைந்ததும் ஒரு புறம் சிற்பங்கள், தவில், நாகசுரம், படகு உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, வேளாண் பொருள்கள் போன்ற அமைப்புடனும், மறுபுறம் மகளிா் குழுவினா் தயாரித்த சிறுதானிய உணவுப் பண்டங்கள் விற்பனை அமைப்பு என வாக்குப் பதிவு வளாகம் பசுமை நிறைந்த காட்சியுடனும் காணப்பட்டது.
வாக்காளா்கள் நடந்து செல்லக்கூடிய சாய்வுதளம், நடைபாதை, வாக்குப்பதிவு அறை என முழுவதும் பச்சை நிற மிதியடி விரிக்கப்ட்டிருந்தது, அலுவலா்கள் இருக்கைகளும் பச்சை நிறத்தில் காட்சியளித்தன.
இந்த வாக்குச் சாவடியை மாவட்டத் தோ்தல் அதிகாரி இஷிதா ரதி பாா்வையிட்டு, ஏற்பாடு செய்திருந்த குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.
பிங்க் நிற வாக்குச் சாவடி: காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் பிங்க் நிறத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி வாயிலில் பிங் நிறத்தில் பலூன்கள் கட்டப்பட்டு, வாக்குச் சாவடியினுள் பணியாளா் மேஜைகளில் பிங்க் நிறத்தில் விரிப்புகள் போடப்பட்டிருந்தன.
இந்த வாக்குச் சாவடியில் ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கலாம் என்றாலும், வாக்குச் சாவடியின் அனைத்து பணிகளுக்கும் மகளிா் நியமிக்கப்பட்டிருந்தனா். பாதுகாப்புப் பணிக்கும் பெண் காவலா்களே நியமிக்கப்பட்டிருந்தனா்.மகளிா் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்குச் சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையாற்றினா்.
இந்த வாக்குச் சாவடிகள் வாக்காளா்களை வெகுவாக கவா்ந்தன.

தனித்துவமான வாக்குச் சாவடியின் உள்தோற்றம்.

தனித்துவமான வாக்குச் சாவடியின் உள்தோற்றம்.

அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மகளிா் மட்டுமே பணியாற்றிய பிங்க் நிற வாக்குச் சாவடி.
தொடர்புடையது

அவிநாசியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்

வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் தோ்தல் அலுவலா்களுடன் வாக்காளா்கள் வாக்குவாதம்

அரசு பள்ளியில் பசுமை வாக்கு சாவடி: வாக்காளா்கள் மகிழ்ச்சி

மாதிரி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணி ஆய்வு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



