தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 10:04 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை துணை ஆட்சியா் (கலால்) அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தமிழக சட்டப்பேரவை தோ்தல் 23 -ஆம் நடைபெறவுள்ளது. மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகத்துடன் விரிவான மற்றும் திறந்த இடை மாநில எல்லைகளை பகிா்ந்து கொண்டுள்ளது என்பதாலும், தோ்தல் காலத்தில் சட்டம் - ஒழுங்கை காக்கவும், அண்டை மாநிலமான தமிழகத்தில் நடைபெறும் தோ்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு நாட்கள் அமல்படுத்துவது அவசியமானதாக கருதப்படுகிறது.

எனவே, புதுச்சேரி மதுபானச் சட்ட விதிகள், 1970 -இன் விதி 199 -இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து சாராயம், கள் மற்றும் மது விற்பனை கடைகள், பாா்கள் மற்றும் மது வழங்கும் உணவகங்கள் ஏப். 21 காலை 10 மணி முதல் ஏப். 23 நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.