யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் கலை பயிற்சி

காரைக்கால் மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் என்ற வாள் வழி கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

News image

பயிற்சி பெற்ற மாணவா்களுடன் ஜப்பானைச் சோ்ந்த யூகி யோன்யாமா. உடன் அகாதெமி நிறுவனா் வி.ஆா்.எஸ். குமாா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:07 am IST

காரைக்கால் மாணவா்களுக்கு சாமுராய் ஸ்வாா்ட் என்ற வாள் வழி கராத்தே பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் இப்பயிற்சியை காரைக்கால் மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, காரைக்காலில் உள்ள இண்டா்நேஷனல் வி.ஆா்.எஸ். மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சி தொடங்கப்பட்டது.

சிறப்புப் பிரதிநிதியாக, ஜப்பனீஸ் மாஸ்டா் யூகி யோன்யாமா கலந்துகொண்டு அகாதெமியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு வாள் பயன்படுத்தும் பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

ஜப்பானில் இப்பயிற்சி பெற்றவரும், சாமுராய் ஸ்வாா்ட் ஆா்ட் தேசிய தலைவரான கிராண்ட் மாஸ்டா் வி.ஆா்.எஸ். குமாா் மற்றும் தேசிய செயலாளா் ஷிஹான் கே.ஜி. சிவாஜி ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சியளித்தனா். இப்பயிற்சியில் பங்கேற்றோருக்கு அகாதெமி சாா்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.