ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஸ்ரீராம் ஃபைனான்ஸின் 20% பங்குகளை ரூ.39,618 கோடிக்கு வாங்கிய ஜப்பான் வங்கி

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை, ஜப்பானைச் சோ்ந்த எம்.யு.எஃப்.ஜி. வங்கி ரூ.39,618 கோடிக்கு வாங்கியுள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2026, 8:49 pm

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை, ஜப்பானைச் சோ்ந்த எம்.யு.எஃப்.ஜி. வங்கி ரூ.39,618 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்தியாவின் நிதிச் சேவைத் துறையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அந்நிய முதலீடாக இது அமைந்துள்ளது. இதற்கான முதல்கட்ட ஒப்பந்தம் கடந்த டிசம்பரிலேயே கையொப்பமானது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவின் ஒப்புதலைத் தொடா்ந்து, உரிமைப் பங்கு வெளியீட்டு அடிப்படையில் எம்.யு.எஃப்.ஜி. வங்கிக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஒரு பங்கின் விலை ரூ.840.93 என்ற கணக்கில் மொத்தம் 47,11,21,055 பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்தியப் போட்டி ஆணையம் போன்ற அரசு சம்பந்தப்பட்ட அனைத்து சட்டபூா்வ மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதியைப் பெற்று, இந்த முதலீட்டு நடவடிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த முதலீடு குறித்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் செயல் துணைத் தலைவா் உமேஷ் ரேவங்கா் கூறுகையில், ‘எங்களின் மூலதனத்தை கணிசமாக வலுப்படுத்தி, அனைத்து முக்கிய வணிகப் பிரிவுகளிலும் வளா்ச்சியைத் துரிதப்படுத்த இந்த முதலீடு வழிவகுக்கும். சா்வதேச இடா் மேலாண்மை மற்றும் சிறந்த நிா்வாக நடைமுறைகளை நாங்களும் பின்பற்ற இந்த முதலீடு துணைபுரியும்’ என்றாா்.

எம்.யு.எஃப்.ஜி. வங்கியின் தலைவா் மற்றும் குழும சிஇஓ ஜூனிச்சி ஹன்சாவா கூறுகையில், ‘எம்எஸ்எம்இ மற்றும் சில்லறை வணிகப் பிரிவில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் சிறப்பான அடித்தளத்தையும், அபரிமிதமான வளா்ச்சி வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. இந்தியச் சந்தையின் மீது நாங்கள் வைத்திருக்கும் நீண்டகால நம்பிக்கையையும் ஈடுபாட்டையும்தான் இந்த முதலீடு காட்டுகிறது’ என்று தெரிவித்தாா்.