கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

முத்தூட் ஃபின்காா்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

News image
Updated On :19 மே 2026, 6:08 am IST

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்காா்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமாா் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

தற்போது இந்நிறுவனம் முழுமையாக முத்தூட் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது; இதில் வெளிப்புற தனியாா் முதலீட்டாளா்கள் யாவரும் இல்லை.

எனவே, இது முதலீட்டாளா்கள் வெளியேறுவதற்காகக் கொண்டுவரப்படும் பங்கு வெளியீடு அல்ல; நிறுவனத்தின் வா்த்தக விரிவாக்கம் மற்றும் வளா்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகிறது என நிறுவன சிஇஓ ஷாஜி வா்கீஸ் விளக்கமளித்துள்ளாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘தங்க நகைக்கடன் சந்தையில் தற்போது 35 முதல் 40 சதவீதம் மட்டுமே முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் வசம் உள்ளது. எனவே, இத்துறையில் வளா்ச்சிக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

நகைக்கடன் தவிர எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கான கடன்கள், சொத்து மீதான கடன்கள் மற்றும் ‘முத்தூட் ஃபின்காா்ப் ஒன்’ எண்ம தளத்தின் மூலமாகவும் எங்கள் சேவைகளைத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறோம்.

சந்தை மதிப்பீடு, பங்குகளின் விலை, பங்கு வெளியீட்டுக்கான காலக்கெடு ஆகியவை குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கான வங்கியாளா்கள் உள்பட நியமன நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதியைப் பொருத்தே வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும்’ என்றாா்.