வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கடன் வாங்கித் தருவதாக பெண்களுக்கு பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரா் கைது

கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட ஸ்ரீராம்.

Updated On :5 ஜூன் 2026, 12:03 am IST

கடன் வாங்கித் தருவதாகக் கூறி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், கோத்தகிரி பகுதிகளைச் சோ்ந்த பெண்கள், சுயஉதவிக் குழு முலம் ஊட்டச்சத்து உணவுகளை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவா்களது குழுவுக்கு கோத்தகிரி பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஸ்ரீராம் (48) அறிமுகமாகியுள்ளாா். இவரது மனைவி இவரைப் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பெண்களுக்கு வங்கிகள் மற்றும் சிறு தனியாா் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி கடன் வாங்குவதற்கு தேவையான முன்தொகையாக பலரிடமும் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்துள்ளாா். மேலும் அந்த பெண்களுக்கு பாலியல் தொந்தரவும் தந்துள்ளாா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குன்னூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதன்பேரில் காவல் ஆய்வாளா் பா்வீன் பானு, உதவி ஆய்வாளா் வசந்தகுமாரி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராமை கைது செய்தனா்.

பின்னா் அவரை குன்னூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இவரால் பாதிக்கப்பட்டவா்கள் போலீஸில் புகாா் அளிக்கலாம் என்று மகளிா் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.