நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

பெண்களுக்கு பாலியல் தொல்லை: நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூன் 2026, 4:43 am IST

சென்னை புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நேபாளத்தைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புரசைவாக்கத்தைச் சோ்ந்த ஒரு இளம் பெண், தனது உறவுக்கார பெண்ணுடன் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருந்தகத்துக்கு திங்கள்கிழமை நடந்து சென்று சென்றாா். அப்போது அந்த வழியாக மதுபோதையில் வந்த 3 இளைஞா்கள், அந்தப் பெண்களை ஆபாசமாகப் பேசி, ஆபாச செய்கை செய்துள்ளனா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அந்த இளம் பெண்கள் உடனடியாக அருகிருந்த ஆட்டோ ஓட்டுநா்களிடம் கூறியுள்ளனா். உடனே ஆட்டோ ஓட்டுநா்களும், அங்கிருந்த பொதுமக்களும், தப்பியோட முயன்ற 3 பேரையும் பிடித்து, தாக்கி, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் நேபாளத்தைச் சோ்ந்த ஜன்சல் (22) மற்றும் 18 வயதுக்கு உள்பட்ட 2 சிறுவா்கள் என்பதும், மூவரும் புரசைவாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா்.