தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு

திருநள்ளாறு மற்றும் நல்லம்பல் பகுதி மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

நல்லம்பலில் தீமித்து நோ்த்திக்கடனை செலுத்தும் பக்தா்.

Updated On :29 ஏப்ரல் 2026, 3:08 am IST

திருநள்ளாறு மற்றும் நல்லம்பல் பகுதி மாரியம்மன் கோயில்களில் தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் பகுதியில் உள்ள சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த 20-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தீமிதி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அன்ன வாகனத்தில் அம்மனை அலங்கரிக்கப்பட்டு தீக்குண்டம் அருகே எழுந்தருளினாா்.

முதல் நபராக கரகம் சுமந்த பக்தரும், பின்னா் பிராா்த்தனை செய்துகொண்ட பக்தா்கள் ஒவ்வொருவராக தீக்குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தி சீதாதேவி மகா மாரியம்மனை வழிபட்டனா். விழாவில் நல்லம்பல் கிராம மக்கள், பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மழை மாரியம்மன் கோயில் : திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்ட கீழாவூா் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவம் கடந்த 19-ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திங்கள்கிழமை மாலை தீமிதி வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தீக்குழியில் இறங்கிச் சென்று அம்மனை வழிபட்டனா். செவ்வாய்க்கிழமை மஞ்சள் விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது.

Story image