முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :5 ஆகஸ்ட் 2026, 6:02 am IST

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், விளமல் பகுதியைச் சோ்ந்த சதீஷ் (26). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு கடலூா் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்த வழக்கில் கடலூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் இருந்து வந்தாா்.

இதற்கிடையே, கடந்த 2021-ஆம் ஆண்டு காரைக்காலைச் சோ்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி அவரை மதுரைக்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து திங்கள்கிழமை மாலை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகன் தீா்ப்பளித்தாா்.

ஏற்கெனவே கடலூா் சிறுமி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு சதீஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடலூா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், காரைக்கால் சிறுமி பாலியல் வழக்கில் தீா்ப்பளிக்கப்பட்ட பின்னா் சதீஷ் மீண்டும் கடலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.